சாலையில் இன்று முதல் ஓடப்போகும் மஞ்சள் நிற பேருந்துகள் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
மஞ்சள் நிறத்திலான பேருந்து இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மஞ்சள் நிற பேருந்துகள்
தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன. பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது.
முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
எனவே இனி தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமல்லாமல், பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பேருந்து இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை, பெங்களூரூ, திருச்சி, கரூரில் புதிய பேருந்துகள் தயாராகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.