எல்லை மீறிய எடியூரப்பா? தனிஅறையில் என்ன நடந்தது - அவரே கொடுத்த விளக்கம்!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாருக்கு எடியூரப்பா விளக்கம் கொடுத்துள்ளார்.
பாலியல் புகார்
பெங்களூரை சேர்ந்த 17 - வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், ஒரு உதவி கேட்டு 17 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு அவரது தாயார் எடியூரப்பா வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்ற எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அறைக்குள் நடந்த சம்பவங்களை வெளியில் கூற வேண்டாம் எனவும், தேவையான உதவிகளை செய்வேன். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடியூரப்பா விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள எடியூரப்பா, எனக்கு எதிராக ஒரு பெண் புகாரளித்து இருப்பதாக கேள்வி பட்டேன். ஒரு மாதத்திற்கு முன்பு இருக்கும். எனது வீட்டிற்கு முன்பாக அடிக்கடி வந்து கொண்டிருந்தனர். இருவரும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக இரு பெண்களும் கூறினர்.
நான் போலீசாரை அழைத்து தேவையான உதவிகளை செய்யுமாறு கூறினேன். அதன்பிறகு எனக்கு எதிராகவே அவர்கள் பேச தொடங்கிவிட்டனர். உதவி செய்ய போய் இப்படி எல்லாம் நடக்கும் என நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினேன்.
இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.