கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரின் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா (30). இவர் கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பாவின் மகள் வழி பேத்தியாவார். சௌந்தர்யாவுக்கு 6 மாத குழந்தை உள்ளது.
சவுந்தர்யா மத்திய பெங்களூருவில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
பயிற்சி மருத்துவரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவர் வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சௌந்தரியாவில் உடலை கைப்பற்றி பெங்களூரு போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது.