கத்தியைக் காட்டி மிரட்டி 80 வயது மூதாட்டி வன்கொடுமை- கொடூர காமூகன் கைது
மதுரை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், வடகாடுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திர பாண்டி (40). இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று வீட்டின் அருகே தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியின் வீட்டிற்கு சவுந்திர பாண்டி சென்றிருக்கிறார்.
அப்போது முதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார். மேலும் உண்மையை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இதனால், மூதாட்டியின் உடல்நிலை மோசமடைந்தது. மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.
மூதாட்டி உடல்நிலை மோசமாக உள்ளதை பார்த்து உடனடியாக அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசாரிடம் மூதாட்டி நடந்ததை சொல்லியிருக்கிறார்.
உடனே வழக்குப் பதிவு செய்த போலீசார், சவுந்திர பாண்டியை கைது செய்தனர். பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.