நோபல் உலக சாதனை படைத்த 9 வயது தமிழ் சிறுமி
tamil
girl
record
nobel
By Jon
நோபல் உலக சாதனை படைத்துள்ளார் தஞ்சையை சேர்ந்த 9 வயதான வர்ஷிஹா. தஞ்சாவூரின் பட்டுக்கோட்டையில் செங்கப்படுத்தான்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, இவரது மகள் வர்ஷிஹா, 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், காவல்துறை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் கலந்து கொண்ட வர்ஷிஹா, 2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி சாதனை படைத்துள்ளார்.
வர்ஷிஹாவை பலரும் பாராட்டியதுடன் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் நோபல் உலக சாதனை சான்றிதழ் வழங்கி, பதக்கத்தையும் அணிவித்துப் பாராட்டினார்.