ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது மகன் மரணம்! தாய் கைது
எலிமருந்து கலந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 5 வயது மகன் உயிரிழந்ததால் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் கசராகாட் மாவட்டத்தின் கான்கன்காட் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. மன உளைச்சலில் இருந்த 25 வயதான வர்ஷா, ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்டதும் மயக்கமடைந்த வர்ஷா, மயக்க நிலையில் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.
மீதி ஐஸ்கிரீமை அப்படியே வைத்துவிட்ட நிலையில், அதைப் பார்த்த வர்ஷாவின் 5 வயது மகன் அதை சாப்பிட்டுள்ளார், தொடர்ந்து 19 வயதான வர்ஷாவின் தங்கையும் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் பிரியாணி சாப்பிட்டு உறங்க சென்றுள்ளனர், நள்ளிரவில் திடீரென வர்ஷாவின் மகன் வாந்தி எடுத்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், வர்ஷாவின் சகோதரிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வர்ஷா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால் வர்ஷாவை கைது செய்த போலீசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.