இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் - வெறும் கண்களால் பாக்காதீங்க

End Year Last Surya Grahan
By Thahir Dec 04, 2021 07:59 AM GMT
Report

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தொடங்கி நடைபெற்று வருகிறது 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று காலை 10:59 முதல் மாலை 03:07 வரை நடைபெற உள்ளது.

சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் சென்று சூரியனைத் தடுக்கும் ஒரு நிகழ்வாகும்.

இந்த முறை துருவ கிரகணத்தை காணும் சில நாடுகள் உள்ளன. இந்த அறிய நிகழ்வு தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள நாடுகளில் தெரியும் என்றும் இந்தியாவில் இந்த நிகழ்வு தென்படாது என்று நாசா தெரிவித்துள்ளது.

இது குறித்து நாசா சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது.

மேலும் சன் கிளாஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என கூறியுள்ளது. உங்கள் கண்களில் குறைபாடு இருந்தால் அதற்காக கண் கண்ணாடி போட்டிருந்தால் நீங்கள் சூரிய கிரகணத்தை காணும் போது,

கிரகணத்தை காண வடிமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கண்ணாடிகளை நிச்சயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின் போது வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும் எனவும் நாசா கூறியுள்ளது.மேலும் கிரகணம் முடிந்த பிறகு கிரகண பார்வை கண்ணாடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் நாசா கேட்டுக்கொண்டுள்ளது.