முதல்வருக்கு கோவில் கட்டிய பாசக்கார எம்.எல்.ஏ.,
முதலமைச்சருக்கு எம்.எல்.ஏ. ஒருவர் கோவில் கட்டிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இவரின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியை சேர்ந்தவர்மதுசூதன் ரெட்டி என்பவர் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
இவர் அங்குள்ள ஜெகண்ணா காலனி அருகில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடி செலவில் கோவில் கட்டி உள்ளார். இந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு வருவோருக்கு ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செய்த நலத்திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிகள் வழங்கப்படுகிறது.
மேலும் அந்த தொகுதி மக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்கள் சமர்ப்பிக்க ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆந்திர முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் கோவிலினுள் வைக்கப்பட்டுள்ளன.