முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம் - சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு குடியரசு தலைவர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். யஷ்பால் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்காக 37 ஒருநாள் போட்டிகள் மற்றும் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் .
1979 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் யஷ்பால் சர்மா, 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்பு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இரு முறை பணியாற்றி உள்ளார்.
இதனிடையே உலகின் ஒரு தலைசிறந்த வீரர் மறைந்தது வேதனை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ட்விட்டரில் கூறியுள்ளார்.