யாசின் மாலிக் குற்றவாளி - என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த விடுதலை முன்னணியின் தலைவரான யாசின் மாலிக் மீது என்ஐஏ சட்டவிரோத பணப்பரிவத்தனை வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கு டெல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் தான் ஈடுபட்டதாக யாசின் மாலிக் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் தீவிரவாதத்தை துாண்டி காஷ்மீரில் பள்ளிகளை எரிப்பது,கல் எரிந்து போராட்டங்களில் ஈடுபடுவது. உள்ளிட்டவற்றை துாண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து ஆதாரங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
#WATCH | Delhi: Separatist Yasin Malik being brought out of NIA Court after hearing in terror funding case. The court convicted him in the matter. Argument on sentence to take place on 25th May. pic.twitter.com/33ue61lDaH
— ANI (@ANI) May 19, 2022