சந்தானம் ஷூட்டிங்கில் பாலியல் சீண்டல் - 13 வயசு தான் அப்போ..! யாஷிகா ஆனந்த்
நடிகர் சந்தானம் படத்தின் ஷூட்டிங்கில் தான் சந்தித்த பாலியல் தொந்தரவு குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து சோஷியல் மீடியாக்களிலும் தனது புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா தற்போது நலம் பெற்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சந்தானம் ஷூட்டிங்கில்
இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், யாஷிகா, பொது இடத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து மனம் திறந்துள்ளார். அது நடிகர் சந்தானத்தின் "இனிமே இப்படித்தான்" படத்தின் ஷூட்டிங்கில் தான் நடந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு போது, ஒருவன் தவறான இடத்தில் தொட்டான் என்ற யாஷிகா, அந்த வயதில் அது குட் டச்சா இல்ல பேட் டச்சா என்று கூட தெரியாது என்று கூறி, ஆனாலும் உடனே நான் அப்படியே திருப்பி, எட்டி உதைத்துவிட்டேன் என்றார்.
அவன் அப்படியே விழுந்துவிட்டான் என்றும் ,மேலும், தான் 13 வயதாக இருக்கும் போதே அப்படி செய்து இருக்கிறேன் என்றும் யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.