Thursday, Jul 3, 2025

யாஷிகாவை வெறிக்க வெறிக்க பார்த்த Bouncer - வைரலாகும் வீடியோ..!

Yashika Aannand Viral Video
By Nandhini 3 years ago
Report

பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன், ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா கடந்த மே 29ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

அப்போது, இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டாளமே கலந்து கொண்டது.

நடிகைகள் ஊர்வசி ரத்தேலா, பூஜா ஹெக்டே. தமன்னா, ஹன்சிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், லட்சுமி ராய், டிம்பிள் ஹயாத்தி, ஸ்ரீலீலா, நுபுர் சானொன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிலையில், அவ்விழாவில் யாஷிகா படு கவர்ச்சியாக வெள்ளையில் கலந்த தங்க நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தார்.

அப்போது, யாஷிகா அவ்விழாவில் வலம் வந்த போது, அதில் ஒரு பாதுகாவலர் யாஷிகா அணிந்து வந்த உடையை, வெறிக்க வெறிக்க பார்த்துள்ளார்.

இதை கவனித்த யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.