விபத்து நடந்த இடத்திற்கு சென்ற யாஷிகா: பாவனியை நினைத்து கண்ணீர்

Visit Bhavani Yashika Aannand Accident Place
By Thahir Dec 12, 2021 10:04 PM GMT
Report

நடிகை யாஷிகா தன் தோழி பாவனி உள்பட 3 பேருடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் பாவனி உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. சில மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா தற்போது ஸ்டிக் உதவியுடன் மெல்ல மெல்ல நடக்கத் துவங்கியிருக்கிறார்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு சென்றார் யாஷிகா. காரில் இருந்த தன்னை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்களை சந்தித்து நன்றி கூறினார்.

அப்பொழுது கண்கலங்கிவிட்டார். விபத்து நடந்த இடத்திற்கு வரவே பிடிக்கவில்லை. என்னை போன்று பாவனியையும் காப்பாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

என்னை காப்பாற்றியவர்களை பார்த்து நன்றி சொல்லவே வந்தேன் என்றார். முன்னதாக அவர் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவரோ, நீ இன்னும் சாகவில்லையா என்று கேட்டார்.

அதற்கு யாஷிகாவோ, நான் சீக்கிரம் இறக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். பாவனி இறந்ததை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறார் யாஷிகா.

பாவனி இறந்து தான் உயிர் வாழ்வது பெரும் தண்டனையாக இருப்பதாக தெரிவித்தா. மேலும் அவ்வப்போது பாவனியின் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.