இது யாஷிகா ஆனந்த் 'ஊ சொல்றீயா' வெர்ஷன்: வைரலாகும் வீடியோ!

Viral Video Yashika Aannand
By Thahir Jan 01, 2022 01:36 AM GMT
Report

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர்.

அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.

விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ள யாஷிகா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவின் பாடல் ஒன்றுக்கு யாஷிகா போஸ் கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள 'புஷ்பா' படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல முன்னணி நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டுள்ளார்.

பலவித சர்ச்சைகளை கிளப்பிய இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப்பாடலுக்காகவே ரசிகர்கள் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வருகை தருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'ஊ சொல்றீயா' பாடலுக்கு திரையுலகை சார்ந்த பலரும் நடனமாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை யாஷிகா இந்த பாடலுக்கு வேற லெவலில் போஸ் கொடுத்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

யாஷிகா அண்மையில் பிக்பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.