நீச்சல் குளத்தில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை யாஷிகா - வைரல் போட்டோ
நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், அடல்ட் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் இளைஞர்களிடையே பிரபலமானார். மேலும் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் யாஷிகா கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். பல படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிய அவருக்கு கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சாலை விபத்து அவரது வாழ்க்கையையே 3 மாதங்களுக்கு புரட்டி போட்டது என்றே சொல்லலாம்.
எழுந்து நடக்க முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்த அவர் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதேபோல் கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தியும் வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தின் அருகில் நின்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களிடையே பெரிதும் கவர்ந்துள்ளது. பார்ப்பவர்கள் பிரபல நடிகை நமீதாவின் லேட்டஸ்ட் வெர்ஷன் போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.