வேதனை இருந்தாலும் சந்தோஷமா இருக்கு - யாஷிகா ஆனந்தின் உருக்கமான ட்வீட்

Yashika Anand KadamaiyaiSei
By Petchi Avudaiappan Sep 10, 2021 05:29 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

வேதனை இருந்தாலும் சந்தோஷமா இருக்கு - யாஷிகா ஆனந்தின் உருக்கமான ட்வீட் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இரவு தன் தோழி பவானி, நண்பர்கள் இருவருடன் ஹோட்டலில் சாப்பிட சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் பவானி உயிரிழந்த நிலையில் , படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இன்னும் 5 மாதங்களுக்கு தன்னால் நடக்க முடியாது என்றும், படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்று யாஷிகா சமூகவலைதளத்தில் தெரிவித்தார். மேலும் பவானி இல்லாமல் தான் உயிர் வாழ்வதே கொடுமையாக இருக்கிறது என அவர் தெரிவிக்க ரசிகர்கள் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யாவுடன் யாஷிகா சேர்ந்து நடித்த கடமையை செய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் ஒரு பக்கம் வாழ்க்கை உணர்வற்று, வேதனையாக இருக்கிறது. மறுபக்கம் வாழ்க்கை போய்க் கொண்டு தானே இருக்கும்... பல ஆண்டு கடின உழைப்புக்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி எஸ்.ஜே. சூர்யா என தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் அவர் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.