நிரூப் உடன் எப்போது கல்யாணம்? - வெளிப்படையாக பதில் சொன்ன யாஷிகா ஆனந்த்
பிக்பாஸ் போட்டியாளரான நிரூப் உடன் எப்போது கல்யாணம் என்ற கேள்ச்விக்கு நடிகை யாஷிகா ஆனந்த் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தான் யாஷிகா ஆனந்தின் எக்ஸ் லவ்வர் என்றும் அவரால் தான் பிக் பாஸ் மேடை வரை தன்னால் வர முடிந்தது என்றும் கூற சக போட்டியாளர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அதேபோல் ஃப்ரீஸ் டாஸ்கின் போது அனைவரது குடும்பமும் உள்ளே வந்தபோது நிரூப்பை சந்திக்க நடிகை யாஷிகா உள்ளே வந்திருந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் நிரூப் எந்தவொரு இடத்திலும் யாஷிகாவை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.
இதில் கலந்து கொண்ட சக போட்டியாளரும், 3வது சீசனில் பங்கேற்றவருமான நடிகை அபிராமியும் முன்னாள் காதலர்கள் ஆவர். இந்நிலையில் தற்போது நிரூப்புடன் எப்போது திருமணம் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை யாஷிகா ஆனந்த், நாங்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்னதாக பிரேக்கப் செய்து விட்டோம். கடைசி வரை நல்ல நண்பர்களாக இருப்போம். இப்போதைக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என யாஷிகா ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் அவரது முன்னாள் காதலியான அபிராமி இருவரும் சந்தித்து பேசி பழகி வருவதை நீங்க எப்படி பார்க்குறீங்க? என்கிற கேள்வியையும் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு இருவரும் மெச்சூர் ஆனவர்கள், அவர்கள் சந்தித்து பேசிக் கொள்வதில் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மேலும், அவர்களை பற்றி கமெண்ட் செய்ய நான் யார், வாழுங்கள் வாழ விடுங்கள் என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.