வங்கக்கடலில் யாஸ் புயல்: தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
யாஸ் புயல் அச்சுறுத்தல் காரணமாக தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது
. வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து நாளை புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அதிதீவீர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26-ம் தேதி மாலையில் கரையை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
— TN SDMA (@tnsdma) May 23, 2021
. தமிழகத்துக்கும் யாஸ் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என கூறியுளளது. 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறித்தியுள்ளது.
யாஸ் புயல் எதிரொலியால் தமிழகத்தின் எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.