பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் - வைரலாகும் வினோத கிராமம்!

China
By Sumathi Nov 24, 2025 04:00 PM GMT
Report

பூமிக்கு அடியில் வடிவமைக்கப்படும் சொகுசு பங்களாக்கள் வைரலாகி வருகிறது.

யாவோடாங்குகள்

சீனாவில் உள்ள லோஸ் பீடபூமியில் மக்கள் பூமிக்கு அடியில் வசித்து வருகிறார்கள். யாவோடாங்குகள் என்று அழைக்கப்படும் இந்த குகை வீடுகள் சுமார் 2000 முதல் 4000 ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது.

yaodong

சுமார் 40 மில்லியன் பேர் இந்த வீடுகளில் தான் வசித்து வருகிறார்களாம். அந்த பகுதியில் மண் மென்மையாகவும் எளிதில் செதுக்கக்கூடிய வகையிலும் இருக்கும். செங்கற்கள் அல்லது கற்களைப் பயன்படுத்தி வளைவான அறைகள் கட்டியும் வீடுகளை உருவாக்குகிறார்கள்.

உலகில் எந்த நாட்டோட விசா ரொம்ப காஸ்ட்லி தெரியுமா? அமெரிக்கா இல்ல..

உலகில் எந்த நாட்டோட விசா ரொம்ப காஸ்ட்லி தெரியுமா? அமெரிக்கா இல்ல..

என்ன ஸ்பெஷல்?

உள்ளூரில் கிடைக்கும் லோஸ் மண்ணால் மட்டுமே கட்டப்படுகிறது. இப்போது புகைபோக்கி உடன் கூடிய சமையலறை, பெட் ரூம், பாத் ரூம் என சகல வசதிகளையும் கொண்டதாக யாவோடாங் வீடுகள் உள்ளன. மண் சுவர்கள் இயற்கையாகவே வெப்பநிலையைச் சீராக்குகின்றன.

china

அதாவது கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வீட்டை இயற்கையாகவே சூடாக்கும் ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.

1556ல் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இங்கு வசித்த சுமார் 8 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.