உங்க விதி முறையெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது : சீனாவில் இருந்து வெளியேறிய யாகூ , காரணம் என்ன?
பிரபல இணைய நிறுவனமான ‘யாகூ’ சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது.
சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த,சில வருடங்களாக சீன அரசின் இணைய விதிமுறைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘யாகூ’ நிறுவனம் சீனாவில் தற்போது நிலவும் சட்ட ரீதியிலான நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் இருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தது.
இதுகுறித்து ‘யாகூ’ நிறுவனம் தரப்பில் கூறும் போது, :
‘சீனாவில் தற்போது, தொழில் செய்ய சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவும் சிக்கலான சட்டநிலை காரணமாக ‘யாகூ’வின் அனைத்து சேவைகளும் கடந்த 1-ந் தேதி முதல் சீனாவில் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
Yahoo pulls out of China for good - CNN #Yahoo #china https://t.co/nKDbrxF4kR
— Dr. Silvia Elaluf-Calderwood (@silelf) November 3, 2021
‘யாகூ’ நிறுவனம் பயனாளர்களின் உரிமைகள் இலவச மற்றும் திறந்த இணையம் ஆகியவற்றில் எப்போதும் உறுதியாக உள்ளது. இதுவரை சீனாவில் எங்களுக்கு ஆதரவு அளித்த வர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளது.