கோவில் வளாகத்தில் யாகங்கள் நடத்த அனுமதியில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்செந்துார் கோவிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதியில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு நிலைபாடு சரி
கந்த சஷ்டி திருவிழா அனைத்து முருகன் கோவிலிலும் வருகிற ஞாயிற்று கிழமை கொண்டாடப்பட உள்ளது. புகழ்பெற்ற திருச்செந்துார் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சஷ்டி விரதம் இருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் இருந்தது.
கோவிலுக்குள் சஷ்டி விரதம் இருக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கோவிலுக்கு வெளியே கோவில் வளாகத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் நிலைப்பாடு சரியே.
யாகம் நடத்த அனுமதியில்லை
கோவிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துாரில் அனுமதி கேட்பது போல திருப்பதி கோவில் உள்ளே சென்று விரதம் இருக்க அனுமதி கேட்க முடியுமா? என்றும் கேள்வியையும், உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கேட்டனர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசுக்கு அறநிலையத்துறை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.