‘உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்?’- ரசிகரின் கேள்விக்கு தயங்காமல் பதிலளித்து வாயடைக்க செய்த யாஷிகா
2016-ம் ஆண்டு வெளிவந்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர், நடிகை யாஷிகா ஆனந்த்.
கவலை வேண்டாம் படத்தை தொடர்ந்து சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமும்,
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்ட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து வந்த யாஷிகா எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார். மேலும் ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கர் ஒருவரின் ஏடாகூடமான கேள்விக்கு கேஷுவலாக பதில் அளித்துள்ளார் யாஷிகா.
ஒரு ரசிகர், ‘உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்?’, என கேள்வி கேட்க, சற்றும் தாமதிக்காமல் ‘டாக்டர் என்று நினைக்கிறேன்’ என கேஷுவலாக பதிலளித்து கேள்வி கேட்டவரை வாயடைக்க செய்திருக்கிறார் யாஷிகா.
யாஷிகா பதிலளித்த விதத்தை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பராட்டி வருகின்றனர்.
You May Like This