யாஸ் புயல் முன்னெச்சரிக்கை..! தேசிய பேரிடர் மீட்பு குழு விரைவு..!
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, ஊட்டி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு 6 குழுவைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்து யாஸ் புயலென பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்புயலானது கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பகுதியான சென்னை மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு தலா ஒவ்வொரு குழு வீரர்கள் வாகனம் மூலமாக புறப்பட்டுச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அந்தமான் நிக்கோபார் மாநிலத்தின் மாயா பந்தர், டிகிலிப்பூர் தீவுகளுக்கு அதிகளவில் சேதம் ஏற்படும் என வந்த தகவலைத் தொடர்ந்து அரக்கோணம் இந்திய கடற்படை விமான தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக நான்கு குழுக்களும் புறப்பட்டுச் சென்றுள்ளார்