சக்ஸஸ் மீட் கூட வராத சங்கீதா..? காரணம் புரியுதா..! பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்!!
கடந்த சில காலமாகவே நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து பல தரப்பட்ட கருத்துக்கள் சமூகவலைத்தலங்களில் உலவி வருகின்றன.
விஜய் லியோ சக்ஸஸ் மீட்
நடிகர் விஜய் வெற்றி படங்களில் அதிக வசூல் செய்த படமாக லியோ படம் உருவெடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மிஷ்கின், சாண்டி ,மாஸ்டர், கவுதம் வாசுதேவ் மேனன் என பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் எந்த வித பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை என்றே கூறும் அளவிற்கு படம் 540 கோடிகளை கடந்து வசூலை குவித்து வருகின்றது. இதனை முன்னிட்டு தான், அண்மையில் படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடத்தப்பட்டது.
இதனால தான் சங்கீதா வரல
அதில், விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. ஏற்கனவே விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இடையே பிரச்சனைகள் நிலவி வருவதாகவும் அதற்கு காரணம் திரிஷா தான் என்றும் பல கருத்துக்கள் உலவி வருகின்றன.
இந்நிலையில், லியோ சக்ஸஸ் மீட்டில் சங்கீதா பங்கேற்காதது குறித்து சினிமா விமர்சகர் பயில்வான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, லியோ பட வெற்றி விழாவுக்கு திரிஷா வந்ததால் தான் சங்கீதா வரவில்லை எனக் கூறி, லியோவில் விஜய்யும் திரிஷாவும் லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்தது வீட்டில் பெரிய பிரச்சனையாகி இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதனை சக்சஸ் மீட் என்று சொல்வதே பொய் என்ற பயில்வான், விஜய் தனது ரசிகர் மன்ற கூட்டமாகவே நடத்தி உள்ளதாக கூறி, சக்சஸ் மீட்டில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கியிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டி ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று விமர்சித்தார்.