புத்தாண்டில் மற்றொரு சாதனை சாதனை - வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்தது XPoSAT..!
இன்று விண்ணவில் ஏவப்பட்டுள்ள 10 சாட்லைட்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் பாயந்துள்ளது.
XPoSAT
புத்தாண்டான இன்று கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மர்மங்கள் குறித்து ஆய்வு செய்யும் எக்ஸ்போசாட் (XPoSAT) என்ற சாட்டிலைட்டை விண்ணில் சரியாக காலை 9.10 மணிக்கு ஏவியுள்ளது இஸ்ரோ.
மிகப் பெரிய நட்சத்திரங்கள் அதன் எரிபொருள் காலியாகும் போது, அவை கருந்துளைகள் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்களை உருவாக்கும். இதுபோன்ற இறந்த நட்சத்திரங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ வடிவமைத்ததே இந்த XPoSAT சாட்டிலைட் ஆகும். மேலும், எக்ஸ்ரே ஃபோட்டான்கள் மூலம் கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களின் அருகே உள்ள கதிர்வீச்சுகளை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்த சாட்டிலைட்டின் மதிப்பு ரூ 250 கோடி ஆகும்.
இது உண்மையில் மிகக்குறைந்த செலவாகும். ஏனெனில் கிட்டத்தட்ட இதே பணிக்காக அமெரிக்காவின் நாசா IXPE என்ற சாட்டிலைட்டை அனுப்பியிருந்தது. அதன் மதிப்பு ரூ.1500 கோடியாகும்.
விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த XPoSAT வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்துள்ளது.