‘’எங்களை ஒடுக்க நினைப்பவர்களின் தலைகள் சீன பெருஞ்சுவரில் அடித்து நொறுக்கப்படும் ‘’ஜின் பிங் ஆவேச பேச்சு!

china xijinping
By Irumporai Jul 01, 2021 08:36 PM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா  நேர்றுகொண்டாடப்பட்டது. தற்போது ஆட்சியில் இருக்கும்கம்யூனிஸ்டு கட்சி கடந்த 1921-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி நிறுவப்பட்டது.

நீண்ட உள்நாட்டு போருக்கு பிறகு அஆட்சியை பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டையொட்டி இன்று தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் பிரமாண்ட விழா நடந்தது.

இதில் சுமார் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பல்வேறுகலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது

இந்த பிரமாண்ட விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

அதில் நம் சீன மக்களின் தேசிய இறையாண்மையும்,அசாதாரண திறனையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என கூறினார்.

சீன விவகாரத்தில் தலையிட்டால் தலையை நசுக்குவோம்

மேலும்  சீனா மற்ற நாடுகளை ஒடுக்கவில்லை. நாங்கள் வேறு எந்த நாட்டினையும் அடக்கவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை.

நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம். அதே சமயம் சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்பு பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என ஆவேசமாக கூறினார் ஜின்பிங்

மேலும், தைவானை சீன நிலப்பரப்புடன் ஒருங்கிணைப்பது ஆளும் கட்சியின் வரலாற்று பணி என கூறிய ஜின் பிங் அதற்காக தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை நாம் துரிதப்படுத்த வேண்டும் என கூறினார்

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

தற்போது ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு சீனாவுக்கு எதிராக குரல்கள் ஒளிப்பது உலக அளவில் பரவலாக பேசபட்டது

அமெரிக்க அரசு ஹாங்காங் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவே  கூறப்படும் நிலையில் சீன அதிபரின் இந்த  எச்சரிக்கை பேச்சு அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக  பிரபல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.