மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங் : மாநாட்டில் முன்னாள் அதிபர் வெளியேற்றம்
சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கியது. ஒரு வாரக்காலம் நடைபெற்ற மாநாடு, சனிக்கிழமை நிறைவடைந்தது.
மூன்றாம் முறை அதிபராகும் ஜி ஜின்பிங்
இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,296 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் 205 முழுநேர உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் என 376 பேர் கொண்ட மத்திய குழுவை தேர்வு செய்தனர்.
ஏற்கெனவே கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங்கை மத்தியக் குழு முன்மொழிந்துவிட்டது. இதனால் ஜி ஜின்பிங் 3வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோவுக்கு அடுத்து அதிகமான காலம் அதிபராக இருப்பவர் என்ற பெருமையை ஜி ஜின்பிங் பெற உள்ளார்.
முன்னாள் அதிபர் வெளியேற்றம்
இதனிடையை, முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவோ, பொதுக்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Drama in China as former president Hu Jintao is escorted out of the closing ceremony pic.twitter.com/AzsqUJWuFx
— Dan Banik (@danbanik) October 22, 2022
அதிபர் ஜி ஜின்பிங் அருகே அமர்ந்திருந்த ஹு ஜிண்டாவோ திடீரென சில அதிகாரிகளால் கூட்டத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது. இது வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது