கெத்து காட்டும் ஜி ஜின்பிங் - சீனாவில் 3வது முறையாக அதிபரானார்

Xi Jinping China
By Thahir Mar 10, 2023 11:16 AM GMT
Report

சீனாவில் வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ளார்.

3வது முறையாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்

இவரது பதவியேற்பு 14-வது சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீன வரலாற்றை இதுவரை யாரும் 3 முறை அதிபராக பதவியேற்கவில்லை.

மூன்று முறை அதிபர் ஆனதன் மூலம் சீனாவின் வலிமை வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த அக்டோபரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக பதவியேற்றதையடுத்து பெய்ஜிங்கின் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் (Great Hall of the People) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜின்பிங்கிற்கு 2,952 வாக்குகள் கிடைத்த நிலையில் அவர் அதிபராக நியமிக்கப்பட்டார்.

xi-jinping-gets-historic-third-term-as-chinas-president

இவர் பதவியேற்கும் பொழுது எடுக்கப்பட்ட சத்தியப் பிரமாணம் நாடு முழுவது அரசு தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

விசுவாசமாக இருப்பேன்

அந்த பிரமாணத்தில் நன்கு வளமான, மிகவும் வலிமையான, ஜனநாயக மற்றும் சிறந்த நவீன சோசலிச நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று சபதம் செய்தார்.

மேலும், “சீன மக்கள் குடியரசின் அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருப்பேன். அரசியலமைப்பின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும், எனது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றவும், தாய்நாட்டிற்கு மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன்,” என்றும் அவர் உறுதியளித்தார்.