'வந்த இடம் என் காடு' - எம்.எஸ் தோனியை மாஸாக புகழ்ந்த பிரபல WWE வீரர் - வைரலாகும் வீடியோ!

MS Dhoni Cricket India
By Jiyath Sep 08, 2023 08:19 AM GMT
Report

பிரபல WWE வீரர் சாமி ஸெய்ன் முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனியை பற்றி பேசியுள்ளார்.

இந்தியாவில் WWE

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நிகழ்ச்சி என்றால் அது WWE மல்யுத்த போட்டிதான். இந்த நிகழ்ச்சிக்கென உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அமெரிக்காவை சார்ந்த இந்த WWE நிறுவனம் போட்டிகளை உலகம் முழுவதும் பல நாடுகளிலும் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இந்த போட்டியானது ஏற்கனவே நடைபெற்றுள்ளது. அந்த வகையில் சுமார் 6 வருடங்களுக்கு பிறகு இன்று செப்டெம்பர் 8 மீண்டும் இந்தியாவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பல இளைஞர்களின் ஃபேவரைட் சூப்பர்ஸ்டார் ஆன 'ஜான் சீனாவும்' கலந்து கொள்ள உள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி அரங்கில் நடைபெறுகிறது.

எம்எஸ் தோனி

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக WWE வீரர்கள் கெவின் ஓவன்ஸ் மற்றும் சாமி ஸெய்ன் ஆகியோர் இது குறித்து விளம்பரம் செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அப்போது சாமி ஸெய்ன் 'முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி' குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசுகையில் "தான் இந்தியா வந்ததில் இருந்து "எம் எஸ் தோனி, எம் எஸ் தோனி" என கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அவர் இந்தியாவில் மிகப் பெரிய பிரபலம்" என்றும் சாமி ஸெய்ன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை இப்போது இணையவாசிகளும், தோனி ரசிகர்களும் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.