உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முடிவு இதுதான்...!

Sunil Gavaskar World test championship
By Petchi Avudaiappan Jun 22, 2021 10:17 AM GMT
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முடிவு குறித்து முன்னாள் இந்திய வீரரான கவாஸ்கர் கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 ஆம் தொடங்கிய இப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆம் நாளில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

இதனை அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முடிவு இதுதான்...! | Wtc Winners In Case Of A Draw

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெறவிருந்த நிலையில் அங்கு மழை விடாமல் பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல மழை நிற்காததால் நான்காம் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இன்று 5 வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்க உள்ளது. மழையை கருத்தில் கொண்டு ரிசர்வ் டே என்ற 6 வது நாள் ஆட்டம் நடக்கவும் வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டியில் முடிவு கிடைக்காது என்றும், 99 சதவீதம் இறுதி போட்டி டிராவிலேயே முடியும் எனவும் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் முதல் முறையாக ஒரு உலகத்தொடர் முடிவில்லாமல் முடியவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.