டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

வரும் ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிவான் கான்வே, டாம் லாதம், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வில் யங், வாட்லிங், டாம் பிளன்டெல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர், காலின் டி கிரான்ட்ஹோம், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், அஜாஸ் பட்டேல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்