"ஆரம்பமே இப்படியா" - மழையால் தாமதமாகும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்

World test championship final IND vs NZ
By Petchi Avudaiappan Jun 18, 2021 09:31 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்தியா-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

போட்டி தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில் அங்கு மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.