விடாது பெய்த மழை: 4ஆம் நாள் ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் சோகம்

World test championship final Ind vs nz
By Petchi Avudaiappan Jun 21, 2021 03:36 PM GMT
Report

 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 ஆம் தொடங்கிய இப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

2 ஆம் நாளில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெறவிருந்த நிலையில் அங்கு மழை விடாமல் பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

நேரம் செல்ல செல்ல மழை நிற்காததால் நான்காம் நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் ஐசிசி வானிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் டே என ஆறாவது நாளை ஒதுக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.