எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை : டேவிட் வார்னர்

David Warner IPL 2023
By Irumporai May 03, 2023 06:11 AM GMT
Report

எங்களின் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை என டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பிறகு களமிறங்கிய குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது, கேப்டன் பாண்டிய ஒருபக்கம் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்தது, இறுதியாக குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது 

எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை : டேவிட் வார்னர் | Wrong With Our Batting David Warner Open Talk 

பேட்டிங் சிக்கல்

இந்த நிலையில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பேசிய டெல்லி கேப்டன் டேவிட் வார்னர், எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக விளையாடினார்கள். எங்கள் பேட்டிங்கில் என்ன சிக்கல் என தெரியவில்லை. நாங்கள் பேட்டிங்கை நேர்த்தியாக விளையாட முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. மேலும், காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு கலீல் சிறப்பாக செயல்பட்டார்.

இஷாந்த் எப்போதும் இளமையாகி வருகிறார். அன்ரிச் நோக்கியா எங்களின் மிகவும் நிலையான டெத் பவுலர், ஆனால் அதை சரியாகப் பெற முடியவில்லை. ஆனால் இஷாந்த் எங்களுக்காக எதைச் செயல்படுத்த விரும்புகிறார் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எனவும் வார்னர் குறிப்பிட்டார்.