38 வயது பெண்ணை நண்பனுடன் சேர்ந்து கற்பழித்த 81 வயது எழுத்தாளர்!!
மத்திய பிரதேசத்தில் நண்பனுடன் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எழுத்தாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் தேவேந்திர பாண்டே. இவரது நண்பர் சிவ் நாராயணன் பாண்டே ஒரு தொழிலதிபர் ஆவார்.
இவருக்கு ரித்திபாத் என்ற கிராமத்தில் சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் 21 ஆண்டுகளாக ஒரு பெண் வேலை செய்து வந்துள்ளார்.
ஒரு நாள் இவர் வீட்டில் குளித்து கொண்டிருந்த போது அதை வீடியோ எடுத்து வைத்த நாராயணன் பாண்டே, அதை அந்த பெண்ணிடம் காட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனை வழக்கமாக மாற்றிய அவர், ஒரு நாள் அவரது நண்பரும் எழுத்தாளருமான தேவேந்திர பாண்டாவை வீட்டின் விருந்திற்கு அழைத்துள்ளார்.
அப்போது நாராயணன் பாண்டே அவரது 81 வயது நண்பரை, வேலைக்காரியை அனுபவிக்கலாம் என அழைத்து சென்று மீண்டும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் தன் கணவரிடம் கூறிவிட்டு, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது
செய்து சிறையில் அடைத்தனர்.