ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் - சக வீரர்கள் நெகிழ்ச்சி
அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரித்திமான் சாஹா அறிவித்துள்ளார்.
ரித்திமான் சாஹா
2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ரித்திமான் சாஹா.
இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், டெஸ்ட் போட்டிகளில், 3 சதம் மற்றும் 6 அரை சதம் உட்பட 1353 ரன்கள் குவித்து இருக்கிறார்.
ஓய்வு
மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட இவர் டெஸ்ட் போட்டிகளில் 92 கேட்சுகளை பிடித்ததோடு, 12 ஸ்டம்பிங்குகளையும் செய்து உள்ளார்.
ரஞ்சிப்போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிவரும் ரித்திமான் சாஹா, நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கடைசி போட்டியில் விளையாடிய ரித்திமான் சாஹாவை சக வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர்.
முதல் வீரர்
சக வீரர்கள் அணி நிர்வாகம் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓய்வை அறிவித்த ரித்திமான் சாஹாவிற்கு ரிஷப் பந்த், முகமத் சமி, அணில் கும்ப்ளே உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
Thank You, Cricket. Thank You everyone. 🙏 pic.twitter.com/eSKyGQht4R
— Wriddhiman Saha (@Wriddhipops) February 1, 2025
விருத்திமான் சஹா, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் என 5 ஐபிஎல் அணிகளில் ஆடியுள்ளதோடு, ஐபிஎல் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.