'என்ன நல்லா நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க' - புலம்பி தவிக்கும் பிரபல இந்திய அணி வீரர்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா தனக்கு வாய்ப்பு கிடைக்காததை நினைத்து புலம்பி தவித்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுக்குப் பிறகு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இடத்திற்கு விருத்திமான் சஹா தான் சரியாக இருப்பார் என கணிக்கப்பட்ட நிலையில் அவரின் சொதப்பலான பார்ம் காரணமாக அணிக்குள் ரிஷப் பண்ட அழைக்கப்பட்டு தற்போது அவர் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.
இதனிடையே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய தேர்வு குழு சஹா, புஜாரா, ரஹானே ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை. மேலும் இலங்கை அணிக்கு தேர்வு ஆகாத வீரர்கள் ரஞ்சி கோப்பையில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அதற்கு தனிப்பட்ட காரணங்களால் ரஞ்சி கோப்பையில் பங்கேற்க முடியாது என்று விருத்திமான் சஹா ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சஹா, இந்திய அணி மொத்தமாக என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது என வெளிப்படையாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நான் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் அடித்த பொழுது பிசிசிஐ தலைவர் கங்குலி அனுப்பிய பாராட்டு செய்தியில் நான் இருக்கும் காலம் வரை இந்திய அணியில் நீ இருப்பாய் என்று தெரிவித்திருந்தது என்னை ஊக்கப்படுத்தியது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, அப்பொழுது தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னை ஓய்வு அறிவித்துவிடு என்று கூறியதாகவும் சஹா பேசியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.