பாலியல் துன்புறுத்தல் - இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு
பாலியல் துன்புறுத்தல் விவகார குற்றச்சாட்டில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரை விசாரிக்க 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தர்ணா
டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பலர் தர்ணா போராட்டத்தில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தர்ணா போராட்டத்தில் செய்தியாளர்கள் பேசுகையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை. மல்யுத்த பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர் என்று மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
தூக்கில் தொங்க தயார்
இது குறித்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அப்படி எதாவது நடந்திருந்தால் நான் தூக்கில் தொங்க தயார் என்று பதிலளித்தார்.

7 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பிய நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அவசர கூட்டம் அயோத்தியில் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரிஜ் பூஷன் ராஜினாமா குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மல்யுத்த வீரர்கள் தரப்பில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில்,
பிரிஜ் பூஷனால் இளம் வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து கமிட்டி அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் கோரிக்கையையேற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் 7 பேர் கொண்ட கமிட்டியை அமைத்திருக்கிறது.
இந்த கமிட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, அலக்னந்தா அசோக், சதேவ் யாதவ் மற்றும் இரு வழக்கறிஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் விசாரித்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.