அடுத்தடுத்து பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கும் வீரர்கள் - தீவிரமாகும் விவகாரம்!

Wrestling India
By Sumathi Dec 24, 2023 08:00 AM GMT
Report

மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளார்.

பாலியல் புகார் 

மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து பல நாட்களாக ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

wrestler-virender-singh

அதன்பின், பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடும் எதிர்ப்பு: இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் - மத்திய அரசு அறிவிப்பு!

கடும் எதிர்ப்பு: இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் - மத்திய அரசு அறிவிப்பு!

வீரேந்திர் சிங் விலகல்

இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவித்தார்.

அடுத்தடுத்து பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கும் வீரர்கள் - தீவிரமாகும் விவகாரம்! | Wrestler Virender Singh Return Padma Shri

மேலும், பிரிஜ் பூஷண மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திருப்பி அளிப்பதாக அறிவித்து டெல்லியில் நடைமேடையில் வைத்துவிட்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது சாக் ஷி மாலிக்கிற்கு ஆதரவாக தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீரர் வீரேந்திர் சிங் யாதவும் அறிவித்துள்ளார். இந்தச் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.