இனி போராட பலம் இல்லை..என்னை மன்னித்துவிடுங்கள் - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்!

Wrestling India Paris 2024 Summer Olympics Social Media
By Swetha Aug 08, 2024 03:15 AM GMT
Report

மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.

வினேஷ் போகத்

பிரான்சில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார் . இன்று இரவு தங்கப் பதக்கத்திற்கான இறுதி போட்டி விளையாட இருந்தது. 

இனி போராட பலம் இல்லை..என்னை மன்னித்துவிடுங்கள் - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்! | Wrestler Vinesh Phogat Announces Sudden Retirement

ஆனால் அவர் தற்பொழுது தகுதி நீக்கம் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகியுள்ளது.

பறிப்போன பதக்கம் - தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத்தின் மாமா உருக்கம்!

பறிப்போன பதக்கம் - தகுதி நீக்கம் குறித்து வினேஷ் போகத்தின் மாமா உருக்கம்!

ஓய்வு அறிவிப்பு

இந்த நிலையில்,பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவிருந்த வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு முன்னர் உடல் எடை கூடுதலாக இருக்கிறார் எனக்கூறி, தனது ஓய்வை அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள வினேஷ் போகத், மல்யுத்தப் போட்டி தன்னை வென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இனி போராட பலம் இல்லை..என்னை மன்னித்துவிடுங்கள் - ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்! | Wrestler Vinesh Phogat Announces Sudden Retirement

தனது தாயின் கனவு, தனது தைரியம் என அனைத்தும் உடைந்துவிட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் தெரிவித்துள்ளார்.இனி போராட தன்னிடம் மேலும் பலம் இல்லை என்றும், 2001 முதல் 2024 வரையிலான மல்யுத்தப் போட்டிகளுக்கு Goodbye எனவும் வினேஷ் போகத் பதிவிட்டுள்ளார்.

எப்போதும் உங்கள் அனைவருக்கும் கடன் பட்டிருப்பதற்காக தன்னை மன்னித்து விடுமாறும் அவர் தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.