மல்யுத்த வீராங்கனை திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

By Thahir Oct 08, 2022 02:03 AM GMT
Report

WWE மல்யுத்த வீராங்கனையான சாரா லீ உயிரிழந்து விட்டதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனை உயிரிழப்பு 

WWE முன்னாள் மல்யுத்த வீராங்கனையான சாரா லீ அண்மையில் சைனஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

மல்யுத்த வீராங்கனை திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி | Wrestler Dies Suddenly

அதன் பிறகு முழுவதும் குணமாகி விட்டதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். 30 வயதான இவர் குணமான நிலையில் மீண்டும் ஜிம்மிற்கு சென்று தனது மல்யுத்த பயிற்சியை தொடங்க இருந்தார்.

ஆனால் திடீரென அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரின் தான் பேஸ்புக் பக்கத்தில் சாரா லீ இறைவனுடன் கலந்து விட்டார். அதனால் நாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம் என பதிவிட்டிருந்தார்.

மல்யுத்த வீராங்கனை திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி | Wrestler Dies Suddenly

ஆனால் சாரா லீ எதிராக இறந்தார் என்ற காரணத்தை சொல்லவில்லை. இந்நிலையில் இவருடன் விளையாடிய சக வீரர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சாரா லீ கடந்த 2015 ஆம் ஆண்டு WWE இன் ரியாலிட்டி ஷோ போட்டியான “டப் எனப்” தொடரில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.