‘‘நான் இறந்தால் என்மீது போர்த்தப்படும் கொடி அதிமுகவின் கொடிதான்”: செண்டிமெண்டாக பேசிய அமைச்சர்

minister flag Pandiarajan aiadmk
By Jon Mar 17, 2021 03:31 PM GMT
Report

நான் மறைந்தாலும் என்மீது போர்த்தப்படும் கொடி அதிமுகவின் கொடியாகதான் இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மாஃபா பாண்டியராஜன் அறிவிக்கபட்டார். அதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சியான பாஜக சார்பில் ஆவடியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் பாஜக நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.

  ‘‘நான் இறந்தால் என்மீது போர்த்தப்படும் கொடி அதிமுகவின் கொடிதான்”: செண்டிமெண்டாக பேசிய அமைச்சர் | Wrapped Around Flag Aiadmk Sentimental Minister

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ஆவடி தொகுதிக்கு வந்த ஸ்டாலின் என்னை ஆர்எஸ்எஸ்-காரர் எனவும் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவிற்கு சென்றுவிடுவேன் எனவும் பேசினார் ஆனால் நான் மறைந்தாலும் என் மீது போர்த்தப்படும் கொடி அதிமுகவின் கொடியாக தான் இருக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசினார்.