வழிப்பாட்டு தளங்களில் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது.அதில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்க கூடாது என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது.இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது.

என்னென்ன தளர்வுகள் பின்வருமாறு :

1.நவம்பர் 1ம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்கலாம்

2.வார இறுதி நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி

3.ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு

4.தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி

5.நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம்

6.தமிழகம் முழுவதும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படவும் அனுமதி

7.திருவிழா, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

8.இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட ஊரடங்கு தளர்வுகளை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்