பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர்கள் : அனிதாவின் சகோதரர் ஆவேசம்
பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என அனிதா சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது இந்த நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்று அமைச்சர் பாண்டியராஜன் ட்விட்டர் பக்கத்தில வெளியிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில் அனிதா, வருடத்திற்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். இந்த வாய்ப்பு ஜெயலலிதா ஆட்சி தந்திருக்கு. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவை மன்னிச்சிடாதீங்க. உங்கள் கையில் உள்ள விரல் மை எங்கள் வாழ்க்கை மறந்துறாதீங்க, திமுகவை மன்னிச்சிடாதீங்க என பேசுவது போல இருந்தது. இந்த வீடியோவை பார்த்த அனிதா குடும்பத்தினர் அதிர்ச்சிஅடைந்தனர்.
இது குறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்னம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அதில், உங்கள் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிணத்தை உருவமாக செய்து ஒட்டு கேட்ட அரசியல்வாதி தானே நீங்கள், உங்களிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும். இந்த வீடியோவை பார்த்த பிறகு பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.
[LZWTDJ
இந்த வீடியோவிற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடியோவை தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார். இது சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தான் அந்த வீடியோவை பதிவிடவில்லை எனவும் இதனை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
— Pandiarajan K (@mafoikprajan) April 4, 2021