பெண்ணின் உடலில் நெளிந்த புழுக்கள்; மூளையையும் விட்டுவைக்கல - இந்த உணவால் தான்..

Vietnam
By Sumathi Apr 14, 2023 07:09 AM GMT
Report

பெண்ணுக்கு உடலில் மற்றும் தோலுக்கடியில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடலில் புழு

வியட்நாமைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளூர் உணவான 'டைட் கேன் (Tiet canh)' என்பதை அவரே வீட்டில் தயாரித்துச் சாப்பிட்டுள்ளார். அதன்பின் வருக்கு அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

பெண்ணின் உடலில் நெளிந்த புழுக்கள்; மூளையையும் விட்டுவைக்கல - இந்த உணவால் தான்.. | Worms Seen Moving Underneath Womans Skin Vietnam

அதில், அவருடைய உடலில் கைகள், கால்களில் தோலுக்கடியில் புழுக்கள் திரண்டிருப்பது தெரியவந்தது. மூளையில்கூட புழுக்கள் குழுமியிருந்துள்ளன. சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றதால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய டாக்டர் டிரான் ஹுய் தோ,

எச்சரிக்கை

``முதலில் மருத்துவர்கள், அந்தப் பெண்ணுக்கு பக்கவாதத்தால் இப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால், அவரை ஸ்கேன் செய்துபார்த்ததில், உடலில் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. பச்சை ரத்தத்தால் தயாரிக்கப்பட்ட உணவாலேயே இப்படி நேர்ந்திருக்கிறது என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

ஒருவேளை இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அவர் இறந்துகூட போயிருக்கலாம். நல்ல வேளை மருத்துவர்கள் தகுந்த சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினர்" எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண், ``அந்த உணவை நானே தயாரித்தால் சுத்தமாக இருக்கும் என்று நினைத்து அப்படி செய்துவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.