புழுக்கள் உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் - பெற்றோர்கள் அதிர்ச்சி

worm eggs
By Anupriyamkumaresan Oct 29, 2021 01:59 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகள் அனைத்தும் கெட்டுப்போயிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கவுண்டம்பட்டி பள்ளியில் புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டுப்போனதால் அந்த சமையலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புழுக்கள் உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் - பெற்றோர்கள் அதிர்ச்சி | Worm In Saththunavu Eggs In Karur Shocked

அதோடு, முட்டை விநியோக நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.