உலகின் டாப் 50 உணவகங்கள் லிஸ்ட்; இதில் 2 இந்திய ரெஸ்டாரண்ட் - எதெல்லாம் தெரியுமா?
உலகிலேயே சிறந்த 50 ரெஸ்டாரண்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சிறந்த 50 ரெஸ்டாரண்ட்
உலகில் சிறந்த 50 ரெஸ்டாரண்ட்டுகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள சிட்டி ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் நடந்தது. பரிமாறப்படும் உணவுகள், உணவுகளின் தரம், சுவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் உணவகங்கள் தரவரிசை செய்யப்பட்டன.
இதில், பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள சென்ட்ரல் (Central) ரெஸ்டாரண்ட் முதலிடம் பிடித்துள்ளது. பெண் சமையல் கலைஞர் பணியாற்றும் ஒரு ரெஸ்டாரண்ட் உலகில் டாப் 50 உணவகங்களில் முதலிடம் பிடிப்பதும் இதுதான் முதல் முறை 2வது இடத்தில் பார்சிலோனாவில் உள்ள டிஸ்ஃப்ரூடார் (Disfrutar) என்ற உணவகமும்,
2 இந்திய ரெஸ்டாரண்ட்
3வது இடத்தில் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் செயல்பட்டு வரும் டிவர்க்ஸோ (Diverxo) ஆகியவை உள்ளன. மேலும், இந்திய உணவகங்களான, ட்ரெசிண்ட் ஸ்டூடியோ எனும் ரெஸ்டாரண்ட் 11வது இடத்தை பிடித்துள்ளது.
கக்கன் ஆனந்த் ரெஸ்டாரண்ட் 17வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்த 2 உணவகங்களும் இந்தியாவில் இல்லை. ட்ரெசிண்ட் ஸ்டூடியோ ரெஸ்டாரண்ட் துபாயில் அமைந்துள்ளது கக்கன் ஆனந்த் உணவகம் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் உணவு பழக்க வழக்கங்களை தற்போதைய மக்களுக்கு ஏற்ற வகையிலும், அவர்கள் விரும்பும் வகையிலும் புதுமையாக வழங்கி வருவதாக இடம்பெற்றுள்ளது.