2 உலகப் போர்களை கண்ட உலகின் வயதான பெண் - பிடித்த உணவை சாப்பிட்ட பின் நேர்ந்த சோகம்!

Japan World
By Jiyath Dec 13, 2023 09:51 AM GMT
Report

உலகின் மிக அதிக வயதான பெண்ணாக இருந்தவர் ஜப்பானை சேர்ந்த ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் காலமானார்.

அதிக வயதான பெண்  

உலகின் மிக அதிக வயதான பெண்ணாக இருந்தவர் ஜப்பானை சேர்ந்த ஃபுசா தட்சுமி. இவர் ஜப்பானின் மிக வயதான பெண்மணியாகவும் இருந்தார். இந்நிலையில் ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் காஷிவாராவில் உள்ள முதியோர் இல்லத்தில் காலமானார்.

2 உலகப் போர்களை கண்ட உலகின் வயதான பெண் - பிடித்த உணவை சாப்பிட்ட பின் நேர்ந்த சோகம்! | Worlds Second Oldest Woman Aged 116 Dies

தனக்கு பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு, பராமரிப்பு நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து அதிகாரி ஒருவர் பேசியதாவது "இரண்டு உலகப் போர்கள், பல தொற்றுநோய்களின் இடையே வாழ்ந்த ஃபுசா தட்சுமி தனது 116வது வயதில் டிசம்பர் 12ம் தேதி இறந்தார்.

ஊழியர்களுக்கு வாழ்த்து 

கடந்த 2022ல் உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார். 116 வயதை எட்டிய 27வது நபராகவும் வரலாற்றில் இடம்பெற்றார். மேலும், 1907ல் பிறந்த ஃபுசா தட்சுமி, ஒசாகாவில் விவசாயியான தனது கணவருடன் 3 குழந்தைகளை வளர்த்தார்.

2 உலகப் போர்களை கண்ட உலகின் வயதான பெண் - பிடித்த உணவை சாப்பிட்ட பின் நேர்ந்த சோகம்! | Worlds Second Oldest Woman Aged 116 Dies

சமீபத்தில் தனது பெரும்பாலான நாட்களை முதியோர் இல்லத்தின் படுக்கையில் தான் அவர் கழித்தார் என்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தொடர்ந்து அவர் வாழ்த்தியதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபுசா டாட்சுமிக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.