700 கார்களுக்கு சொந்தக்காரர்; பணக்கார அரசியல்வாதி - யார் தெரியுமா?

Vladimir Putin Money Russia
By Sumathi Oct 20, 2024 03:00 PM GMT
Report

உலகின் பணக்கார அரசியல்வாதி ஒருவர் 700 கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

பணக்கார அரசியல்வாதி

ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின்தான் உலகின் பணக்கார அரசியல்வாதியாக அறியப்படுகிறார். இவரது அதிகாரப்பூர்வ சொத்துகள் என 800 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று, லாரி ஒன்று, 3 கார்கள் உள்ளன என கூறப்படுகிறது.

vladimir putin

இவருடைய ஆண்டு வருமானம் ரூ.1.18 கோடி (1,40,000 அமெரிக்க டாலர்) எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கும் அவருடைய சொத்து மதிப்புக்கும் தொடர்பே இல்லாதது போல் தெரிகிறது. தி பிளாக் சீ என்ற பெயரிலான பெரிய பங்களாவானது, புதினின் சொத்துக்கான அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதில், ஆடம்பர வசதிகள் பல உள்ளன. கிரேக்க கடவுள்களின் சிலைகளுடன் கூடிய சலவைக்கல்லால் செய்யப்பட்ட நீச்சல் குளம் மற்றும் நவீன திரையரங்கம், ஐஸ் ஆக்கி போட்டியை விளையாடுவதற்கான மூடப்பட்ட பகுதி, பணம் கட்டி விளையாட கூடிய கேசினோ அரங்கம் மற்றும் இரவு விடுதி ஆகியவை உள்ளன.

உலகிலேயே மிக விலையுயர்ந்த பள்ளி இதுதான் - 1 வருட கட்டணம் எவ்வளவு தெரியுமா?

உலகிலேயே மிக விலையுயர்ந்த பள்ளி இதுதான் - 1 வருட கட்டணம் எவ்வளவு தெரியுமா?

விளாடிமிர் புதின்

இந்த ஆடம்பர பங்களாவை ஆண்டுக்கு ரூ.16.81 கோடி செலவில் 40 பணியாளர்கள் இணைந்து பராமரிக்கின்றனர். மேலும், இவருக்கு 19 வீடுகளும் உள்ளன. 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் உள்ளன. தவிர, தி பிளையிங் கிரெம்ளின் என்ற பெயரிடப்பட்ட ரூ.6,019 கோடி மதிப்பிலான விமானம் ஒன்றும் உள்ளது.

700 கார்களுக்கு சொந்தக்காரர்; பணக்கார அரசியல்வாதி - யார் தெரியுமா? | Worlds Richest Politician Information In Tamil

இதேபோன்று, ரூ.5,884 கோடி மதிப்பிலான, பந்தயம் அல்லது சுற்றுலா செல்வதற்கு வசதியான ஒரு பெரிய ஆடம்பர ரக படகு ஒன்றையும் வைத்துள்ளார். அவரிடம் பல ஆடம்பர ரக கைக்கடிகாரங்களும் உள்ளன.

இவற்றில் ஒரு கைக்கடிகாரத்தின் மதிப்பு, அவருடைய ஆண்டு சம்பளத்தின் 6 மடங்காக உள்ளது. புதினின் மறைக்கப்பட்ட இந்த சொத்துகள் பற்றிய நிச்சயிக்கப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.