வீழ்வேன் என நினைத்தாயோ : மீண்டும் முதலிடம் கலக்கும் எலான் மஸ்க்
உலக பணக்காரர் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.
சரிந்த எலான்மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் , டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி இதனால் உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலான் மஸ்க் , முதல் இடத்தை லூயிஸ் விட்டின் தலைமை அதிகாரி அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை பிடித்தார்.
மீண்டும் முதலிடம்
கடந்த ஜனவரி மாதம் முதல் டெஸ்லாவின் பங்குகள் 100 சதவிகிதம் வளர்ச்சியடைந்த நிலையில் 185 பில்லியன் டாலர்கள் மதிப்பில் (அதாவது இந்திய மதிப்பில் 153 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடத்தை பெற்றார். இதனால் பெர்னாட் இரண்டாவது இடத்திற்கு மீண்டும் சென்றுள்ளார் .
Say what you want about me, but I acquired the world’s largest non-profit for $44B lol
— Elon Musk (@elonmusk) February 21, 2023
இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லா நிறுவனம், சுமார் 200 பில்லியன் டாலர்கள் (166 ஆயிரம் கோடி) இழந்துள்ளது. இது கிரேக்க நாட்டின் மொத்த ஜிடிபி-ஐ விட அதிகம். மேலும் ட்விட்டரை கைப்பற்ற 44 பில்லியன் டாலர்கள் செலவிட்டதாகவும் வேடிக்கையாக ட்வீட் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதால் ஏற்பட்ட சரிவால் எலான் மஸ்க் ஒரு நாளைக்கு 18 மணி நேரத்தை தாண்டி உழைத்து வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.